புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2022

கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (

www.pungudutivuswiss.com 

இந்தநிலையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ்சையும், பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை

படைத்த மற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - மணிக்கூண்டு கோபுரத்திலிருந்து, சாதனை மாணவன் துவாரகேஸ் மற்றும் சாதனை படைத்த மற்றைய மாணவர்களை பாடசாலைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஊர்வலம் பாடசாலையினை சென்றடைந்ததும் அங்கு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது கா.பொ.த. உயர்தரப்பிரிவில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மாணவன் த.துவாரகேஸ் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன் உயர்தர பிரிவு மாணவர்களை வழிநடாத்தி இந்த ஆண்டு மிகப்பெரும் சாதனையினை புனித மைக்கேல் கல்லூரி பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவு மற்றும் வணிக பிரிவுகளில் முதல் இடத்தை மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் கலைப்பிரிவில் முதலாம் இடத்தை மன்/சித்திவிநாயகர் பாடசாலையும், உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மன்/அஸ்ஹர் தேசிய பாடசாலையும் பெற்றுள்ளது.

மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த மாணவி அபினா அமலதாசன் உயிரியல் பிரிவில் 2 ஏ 1 பி, சித்திகளை பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.


அதே நேரம் தினகரன் ஜனுசா 3 ஏ சித்திகளை பெற்று வணிக பிரிவில், மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

மேலும் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உயர்தர பரீட்சையின் பெறுபேறின் அடிப்படையில் சிவபாலன் யுதர்சன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியாக பௌதீக விஞ்ஞான பிரிவில் முதல் இடத்தையும் , நிலாமதி அன்ரனி 3 ஏ சில்வஸ்டர் சித்திகளைப் பெற்று கலைப்பிரிவில் முதலாம் இடத்தையும் , நகுலராஜா கதுஷன் 3 ஏ சித்திகளைப் பெற்று வணிகப்பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (Photos) | G C E Exam2021 Student

மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி மொஹமட் பாருக் பாத்திமா வாஸ்மியா உயிர் முறைமையியல் தொழில்நுட்பம் பாடத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த தந்தையின் உழைப்பில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறுமைக்கு மத்தியில் கலைப்பிரிவில் முதல் நிலை பெற்று நிலாமதி அன்ரனி சில்வஸ்டர், வறுமையோ வாய்ப்போ வெற்றிக்கு அவசியம் இல்லை. விடா முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.


மன்னார் மூன்றாம் பிட்டியில் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி நிலாமதி குடும்ப வறுமை காரணமாக சிலரின் உதவியுடன் மன்னாரில் உள்ள அன்னை இல்ல விடுதியில் தங்கி, மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையில் 2021 இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

சட்டத்தரணியாகி பின்தங்கிய என் கிராமத்தை முன்னேற்றுவிப்பதுடன் எனது தந்தையின் கனவையும் நினைவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என நிலாமதி தெரிவித்துள்ளார். 


யாழ்ப்பாணம்

அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களது பெறுபேறுகள் வருமாறு,

உயிரியல் பிரிவில்,எல்.சிறிகீசன் 3ஏ, உமாசுதன் 2ஏ பி, கே.ராஜமுகுந்தன் 3ஏ, ஏ.டிலோதமன் 2ஏ பி, கே.கீதாஞ்சலி 3ஏ, வி.தனுசிகா ஏ.2பி, ஏ.லவகீசன் ஏ பி சி, வை.லேக்கா ஏ பி சி, எஸ்.கஜநாத் 2பி சி, ஜே.பானுஜா பி 2சி, வி.லோகிதா பி சி எஸ், எம்.விஜிதா பி 2சி, எஸ். ஜீவிதா பி சி எஸ், ஜே.மதுரா பி 2சி சித்தி பெற்றுள்ளனர். 

மேலும் கணிதப் பிரிவில் எஸ்.கஜாணன் 3ஏ, ஆர்.சுவீஸ்கரன் 2ஏ சி, பி.துசாகரன் ஏ 2பி, எஸ்.தர்சனா 2ஏ பி, பி.திரிகரன் ஏ பி சி, பி.நிருசன் 2பி சி, ஜி.ரிச்சட் ஜெயந்திரன் 2பி சி, எஸ்.தக்சிகன் பி 2சி, பி.சங்கவி 3சி, வி.தனுகரன் பி 2சி வர்த்தக பிரிவு பி.கஜலக்சன் ஏ 2பி, ஜே.ஆரணி 3சி, ரி.நிலக்சன் 3சி சித்தி பெற்றுள்ளனர்.

அத்தோடு கலைப்பிரிவு ஏ.ராகவி 3ஏ, கே.பிரணவசுதன் 2பி சி, எம்.கஜனி 2பி சி, ரி.விருத்சனா பி 2சி  என சித்தி பெற்றுள்ளனர்,

ad

ad