புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2022

பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்தனர்

www.pungudutivuswiss.com

டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சுயேச்சை எம்.பி.க்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

இன்று 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது.

இதன்போது, விசேட உரையொன்றை நிகழ்த்திய,  ஜீ.எல். பீரிஸ் இதனை அறிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

டளஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா, சரித ஹேரத், சன்ன ஜயசுமன, கே.பி.எஸ்.குமாரசிறி, குணபால ரத்னசேகர, உதயண கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, உபுல் கலப்பத்தி, திலக் ராஜகருணா மற்றும் லலித் எலாவ் என மொத்தம் பதின்மூன்று எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

ad

ad