புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2022

தென்னிலங்கை அரசியல் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்! கோட்டபாயவுக்கு அமைச்சு பதவி

www.pungudutivuswiss.comரம

தென்னிலங்கை அரசியல் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்! கோட்டபாயவுக்கு அமைச்சு பதவி | Sri Lanka Political Issues Gotabaya Minister

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படலாம் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அமைச்சராக கோட்டபாய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபயவின் அரசியல்

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ச பொது மக்களால் விரட்டப்பட்டதன் பின்னணியில் அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருந்த கோட்டபாய விரும்பம் கொண்டுள்ளார். எனினும் பொதுஜன பெரமுன கட்சியினர் அவரை மீண்டும் அரசியலில் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியின் தலைவர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ஷ, கோட்டபாயவுக்கான அமைச்சு பதவியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பொதுஜன பெரமுனவை வழிநடத்த யாரும் இல்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியை ஏற்க கோட்டபாய விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சு பதவி

தென்னிலங்கை அரசியல் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்! கோட்டபாயவுக்கு அமைச்சு பதவி | Sri Lanka Political Issues Gotabaya Minister

நகர அபிவிருத்தி விடயத்தில் கோட்டாபயவின் அனுபவமே இந்தப் புதிய அணுகுமுறைக்கு வழிவகுத்துள்ளதாகவும், ஜனாதிபதி இலங்கை வந்த பின்னர் மகிந்த ராஜபக்ச இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்து அமைச்சராக பதவியேற்பது பொருத்தமற்றது என சிலர் கோட்டாபயவிடம் சுட்டிக்காட்டிய போதிலும், கோட்டாபய மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில் தவறில்லை என மகிந்த தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சவின் எதிர்காலம் குறித்து நிறைய யோசித்ததன் பின்னரே இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு கோட்டாபய இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad