புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2022

பிரிட்டனுக்கு வரும் GAS-குழாய்க்கும் பெரும் ஆபத்து : யார் வெடி வைப்பார்கள் என்று தெரியவில்லை

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவுக்கு கடலுக்கு அடியால் வரும் எரி வாயு குழாயை யார் வெடி வைத்து, தகர்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் எரி வாயு குழாய் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ள நிலையில். ஐரோப்பிய நாடுகளில் எரி வாவுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போல பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள காரணத்தால். அன் நாட்டு கடல் படை, குழாய் இருக்கும் கடல் பாதையை தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. நடந்த சம்பவம் ரஷ்யாவால் மேற்கொள்ளப் பட்டது என்று பல நாடுகள் தெரிவித்து இருந்தாலும் , இந்த விடையத்தில் எங்கேயோ உதைக்கிறது ?

காரணம் என்னவெறால் தமது நாட்டில்(ரஷ்யாவில்) இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் எரி வாயு குழாயை ஏன் ரஷ்யாவே தகர்க்க வேண்டும் ? இதனால் ரஷ்யாவுக்கு தானே நஷ்டம். இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே ? எரி வாயுவை கொடுக்க விருப்பம் இல்லை என்றால். ரஷ்யா ஒரு பட்டனை அழுத்தி வினியோகத்தை நிறுத்த முடியும். அப்படிச் செய்யாமல் ஏன் தகர்க்க வேண்டும் ? இந்த விடையத்தில் உக்கிரைன் புகுந்து விளையாடியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் உக்கிரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தவேளை, அனைத்து ஐரோப்பிய நாடுகளும் உக்கிரைன் பக்கமே நின்றது. ஆனால் தற்போது சில நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டை மீறி, ரஷ்யாவிடம் இருந்து மசகெண்ணையை இறக்குமதி செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதனால்…

அமெரிக்க உக்கிரைன் கூட்டு நடவடிக்கையில் ஒன்று தான் இந்த, எரி வாயு குழாய் தகர்ப்பாக இருக்கக் கூடும். என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ad

ad