புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2022

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்கிறார் சட்டமா அதிபர்

www.pungudutivuswiss.com

அரசியலமைப்புக்கு அமைய, அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அதில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அரசியலமைப்புக்கு அமைய, அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அதில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்

முறையற்ற நிதி முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்குமாறு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரயே, எல். டி.பி.தெஹிதெனிய விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் ஐவரடங்கிய குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதன்போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரில் புள்ளே குறித்த விடயத்தை அறிவித்தார்.

வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பொதுச் செயற்பாட்டாளருமான சந்திரா ஜயரத்னவின் உட்பட சிலரால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடனை முறையாக நிர்வகிக்காமை, அந்நிய செலாவணியை பாதுகாக்காதமை, வரி குறைப்பு போன்ற பிரச்னைகளால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் இங்குள்ள எந்தவொரு தரப்பினருக்கும் நிபுணத்துவம் இல்லை என்றும் கணக்காய்வாளர் நாயகத்துக்கே நிபுணத்துவம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தேசிய கணக்காய்வு அறிக்கையை கணக்காய்வாளர் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையின் பிரகாரம் நாட்டின் கடன் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் உள்ளிட்ட 39 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ad

ad