புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2022

கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்

www.pungudutivuswiss.com


பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம். முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம். முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் வரை ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் ஜனாதிபதியான பின்னர் அவரது சர்வாதிகார செயற்பாடுகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்திலேயே பிரச்சினை காணப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் கிடையாது.

வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதும் தவறில்லை. வன்முறைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது. ஆனால் எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையை, சட்டத்தை தமக்கேற்றாற்போல வளைத்து முடக்குவதிலேயே பிரச்சினை உள்ளது.

அடக்குமுறைகளை தொடர்ந்தும் பிரயோகிக்க வேண்டாம் என்றும் , மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

இவை தொடருமானாலும் நாம் நீண்ட நாட்களுக்கு பொறுமையுடன் இருக்கப் போவதில்லை. இன்னும் குறுகிய கால அவகாசத்தை ஜனாதிபதிக்கு வழங்குவோம். அதன் பின்னர் நாம் இலட்சக்கணக்கான மக்களை கொழும்பில் ஒன்று திரட்டி, அவரை சிறை பிடிப்போம்.

முடிந்தால் எம்மை தடுக்குமாறு சவால் விடுக்கின்றோம். அடக்குமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் நாம் கொழும்பில் பாரிய மக்கள் அலையுடன் களமிறங்குவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நாம் இந்த எச்சரிக்கையை விடுத்தோம். அதனை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

மார்ச் 16 ஆம் திகதி அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து வைத்தோம். அதே போன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்போம். எனவே முடிந்தால் முழு எதிர்க்கட்சியையும் கைது செய்யுமாறு சவால் விடுக்கின்றோம்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார்.

எனவே தற்போது ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள், ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயற்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் அனைவரும் எமது அரசாங்கத்தில் பொறுப்பு கூற வேண்டும். அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றார்.

ad

ad