புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2022

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம்

www.pungudutivuswiss.com
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதமும் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கான இருக்கையில் உட்கார்ந்திருந்தார். அதேபோல், 2-வது நாளான நேற்றும் ஓ.பன்னீர்செல்வம் அதே இருக்கையில் அமர்ந்தார். இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி கோஷம் எழுப்பினர். ஆனால் சட்டசபை விதிகளை கூறி சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்தார். இதனால், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில், வள்ளுவர்கோட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி நடைபெறும் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ad

ad