புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2022

உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நாள்- துயில் எழுந்த துயிலுமில்லங்கள்

www.pungudutivuswiss.com
தமிழீழ மாவீரர் நாள்  தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன்  இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழீழ மாவீரர் நாள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்

இன்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதை அடுத்து ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, பொதுச்சுடர்கள் ஏற்றப்பட்டதை அடுத்து மாவீர்ர்களின் பெற்றோர் உரித்துடையோர் ஈகச்சுடர்களை ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் முன்னாள் மூத்த போராளியும், மாவீரர் அறவிழியின் தந்தையுமான பசீர் காக்கா அல்லது மனோகர் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

முள்ளியவளை துயிலுமில்லத்தில் தளபதி லெப்டினன்ட் கேணல் குட்டிமணியின் தாயாரும், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் கரும்புலி மேஜர் காந்தரூபனின் தந்தையும், பொதுச்சுடரினை ஏற்றிவைத்தனர்.

யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. மாவீரரின் தாயாரால் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு தீபங்கள் ஏற்றி மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

கிளிநொச்சி- கனகபுரத்தில்

வடமராட்சி- எள்ளங்குளத்தில்

திருகோணமலை- ஆலங்குளத்தில்

வவுனியா- நகரசபை மண்டபத்தில்

நல்லூரில்

மட்டு. தாண்டியடியில்

முல்லைத்தீவு- தேராவிலில்

   
   Bookmark and Share Seithy.com

  • Welcome

ad

ad