புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2022

200 பில்லியன் ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்த இலங்கையர்கள்!

www.pungudutivuswiss.com



நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்

இதற்கமைய, வர்த்தக வங்கிகள், 10 அடமான நிலையங்கள், 3 பிராந்திய செயலகங்கள் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்களைப் பயன்படுத்தி இவ்வாறு நகைகளை அடகு வைத்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாய பணிகளுக்காகவும், குழந்தைகளின் கல்வி உபகரணங்களை வாங்குவதற்காகவும், உணவு தேவையை நிறைவு செய்வதற்கும் தங்க நகைகளை இவ்வாறு அடகு வைத்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்

ad

ad