
கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண
கால்பந்து போட்டியில் முதலாவது காலிறுதியில் ஜந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணியும் குரோஷியா அணியும் மோதின இதில் இரண்டு அணிகளும் தமது ஆக்கிரோசமான ஆட்டத்தினை 104 வது நிமிடம் எதிர்த்து விளையாடின பின்னர் 105 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் ஜாம்பவான் நெய்மார் தனது முதலாவது கோலினை போட்டார் இது சர்வதேச போட்டியில் பிரேசில் அணிக்காக அவர் அடித்த 77 வது கோல் ஆகும். இந்நிலையில் குரோசியா அணி 117 வது நிமிடத்தில் தமது கோலினை போட்டு போட்டியினை சமநிலையில் நிறைவுசெய்தது.இதன் காரணமாக போட்டியின் வெற்றியை தீர்மாணிக்க பெனால்டி ஹிட் முறைக்கு சென்றது, இதில் 4-2 என்ற அடிப்படையில் குரோசியா அணி அபார வெற்றியீட்டி அரை இறுதிக்கு சென்றது, இதனால் எதிர்பாராத தோல்வியினை தழுவிய பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான் நெய்மார் மைதாணத்தில் தோல்வியினை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் இது தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார். இதனால் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறங்கியுள்ளனர்.