புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2023

மாதவமேஜரின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த சிறிதரன் முயற்சி

www.pungudutivuswiss.com


மாதவமேஜரின் முயற்சியினை மதிக்கின்றோம் அவர் காப்பாற்றப்பட வேண்டும் அதற்காக எவ்வளவு தூரம் எங்களால் ஒத்துழைக்க முடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

மாதவமேஜரின் முயற்சியினை மதிக்கின்றோம் அவர் காப்பாற்றப்பட வேண்டும் அதற்காக எவ்வளவு தூரம் எங்களால் ஒத்துழைக்க முடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.


தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்விற்காக தமிழ்தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புக்கள்,தனிநபர்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டம் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்றது .

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வே.மாதவமேஜரை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாவீரர்களின் சகோதரன், தேசிய பற்றாளன் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கியுள்ளான். அவரின் கோரிக்கைகள் நியாயமானது. இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் சிதறுண்டு வித்தியாசமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். இது சவால் மிகுந்த காலம் இந்த காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றாக வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய கருத்தினை முன்வைத்துள்ளார்.

அவரின் கோரிக்கையுடன் நான் பேசியதன் அடிப்படையில் அவரின் உயிர் முக்கியம் அவர் காப்பாற்றப்பட வேண்டும் அவரை தமிழ்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தற்காலிகமாக போராட்டத்தினை நிறுத்தி ஒரு மக்கள் இயக்கத்தினை கட்டி வளர்த்து மத தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மனிதநேய பணியாளர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து இந்த பணியினை முன்னெடுக்கும் போது அது வெற்றியினை தரும் அதற்கான முன் முயற்சியினை மேற்கொள்ளுமாறு அவரிடம் நான் ஒரு கோரிக்கையினை முன்வைத்துள்ளேன்.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம், இங்கிருக்கின்ற அமைப்புக்களுடன் சந்திப்பு ஒன்று உள்ளது. அந்த சந்திப்பில் அது சாத்தியமாகின்றபோது அந்த அறிவித்தலை தருவதாக தெரிவித்துள்ளார்.

அவரின் முயற்சியினை மதிக்கின்றோம் அவர் காப்பாற்றப்படவேண்டும் அதற்காக எவ்வளவு தூரம் எங்களால் ஒத்துழைக்க முடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad