புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2023

வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை - போராட்டங்களை நடத்த முடிவு!

www.pungudutivuswiss.com

வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம்  நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை  வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம்.  இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம் நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம். இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

யாழ்ப்பாணததில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இப் பேச்சு வார்த்தையில் தனியொரு கட்சியை சார்ந்தோரே கலந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இப் பிரச்சினையை முடிவுறுத்த அரசு அழைப்பு விடுக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் ஓரணியில் திரண்டு தீர்வுத்திட்டங்கள் பற்றி பேச வேண்டும்.

தமிழ் மக்கள் தற்போது உள்ளூராட்சி தேர்தலையோ எதிர்பார்க்கவில்லை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தமிழரின் தேசியப் பிரச்சினை தொடர்பில் சமகாலத்தில் சிந்திக்க வேண்டும். இலங்கை அரசு அழைத்துள்ள நிலையில் அதனை சாதகமாகப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

இச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தத் தவறின் அது ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் வாக்கை பெற்று பிரதிநிதியாக இருப்போர் மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாகும்.

நிகழவுள்ள பேச்சுவார்த்தையானது சகல தரப்பினருக்கும் பகிரங்கப்படுத்தும் வகையில் வெளிப்படையானதாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் எதிர்வரும் 5 - 10ம் திகதி வரை வட கிழக்கில் 8 மாகாணங்களில் மக்களை திரட்டி கவனயீர்ப்பு போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளோம்.

அந்த போராட்டத்திற்கு சகல அரசியல் கட்சிகள் இ சிவில் அமைப்புக்கள் இ ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பூரண ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என்றார்.

ad

ad