புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2023

விக்கியை இணைக்கும் சிவாஜியின் முயற்சி தோல்வி!

www.pungudutivuswiss.com


புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனை கொண்டு வருவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜலிங்கம் தெரிவித்தார்.

புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனை கொண்டு வருவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜலிங்கம் தெரிவித்தார்

விக்னேஸ்வரனின் கட்சி அங்கத்தவர்கள் ‘மான்’ சின்னத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் இறுக்கமாக இருப்பதன் காரணத்தினால் தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுக்க முடியாது போனதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் சின்னம் மற்றும் கட்சி தொடர்பில் ஏற்பட்ட இழுபறிகளைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில், விக்னேஸ்வரனுடன் எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ச்சியான பேச்சுக்களை முன்னெடுத்து வந்திருந்தார். அத்துடன் நேற்றையதினம் காலையிலும் பேச்சுக்களை அவர் தொடர்ந்தபோது, தனது கட்சியின் அங்கத்தவர்களுடன் உரையாடிய பின்னரே தீர்மானத்தினை அறிவிக்க முடியும் என்றும் திட்டமிட்டவாறு புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று 2 மணியளவில் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கிய கூட்டமொன்று அவரது நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தினை அடுத்து, மீண்டும் சிவாஜிலிங்கத்துக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

அதுதொடர்பில், சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. அவர் தரப்பில் இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, புதிய கூட்டணியானது தனது கட்சியிலும், சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என்பதாகும்.

அவ்வாறு இல்லாது விட்டால் மீன் சின்னத்தில் களமிறங்குவதாக இருந்தால் பொதுச்செயலாளர் பதவியை தனக்கு வழங்குமாறும் கோரியிருந்தார். இதனடிப்படையில் என்னுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது கட்சிப்பெயரையும், சின்னத்தையும் தொடர்ச்சியான பயன்படுத்தி ஏனைய தரப்புக்களை எவ்வாறு ஒதுக்கியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆதற்கு எதிராக குரல்கொடுத்துவந்த ஏனைய தரப்புக்கள் தற்போது உங்களது கட்சி, சின்னம் ஆகியவற்றில் எவ்வாறு போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்ற கேள்வியை முன்வைத்தேன்.

புதிய கட்சியில், சின்னத்தில் களமிறங்குவதற்கு இணங்க முடியாது என்றால், ஏற்கனவே உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் களமிறங்க முடியும். மீன் சின்னத்தினைப் பயன்படுத்த முடியும்.

வேட்பு மனுத்தாக்கல் நிறைவுக்கு வந்ததும் பொதுச்செயலாளர் பதிவயை சிவசக்தி ஆனந்தனிடத்திலிருந்து தங்களிடத்தில் பெற்றுத் தருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனினும், அதற்கு விக்னேஸ்வரன் இணங்கவில்லை. தமது கட்சியினர் மான் சின்னத்திலும், கட்சியின் பெயலும் போட்டிபோடுமாறுறே வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே, கட்சியின் கோhரிக்கைகளை புறமொதிக்க விடமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், என்னால், தனித்தனியாக களமிறங்குவதால் காணப்படுகின்ற சாதக , பாதக நிலைமைகள் தொடர்பில் அவருக்கு எடுத்துரைத்ததோடு, தற்போது கூட்டணியில் உள்ளவர்கள், அவருக்கு நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டபோதுதுணையாக நின்றவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டினேன்.

அதன்போது, விக்னேஸ்வரன் தான் மனவேதனை அடைவதாகவும், கட்சி உறுப்பினர்களின் தீர்மானத்தினை மீறிச்செயற்பட முடியாது என்றும் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருடனான பேச்சு முடிவுக்கு வந்தது என்றார்.

இதேவேளை, இன்றையதினம், புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவதற்கு முன்னதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய சங்கத்தின் பிரதிநிதிகளும், சில புத்திஜீவிகளும் விக்னேஸ்வரனைச் சந்தித்து கூட்டணியில் இணைவது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad