புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2023

தேர்தலுக்குத் தடை கோரி உயர்நீதிமன்றில் மனு!

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர்  நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ  கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார்

இம்மனுவில், பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதமர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தான், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கான செலவீனம் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் விபரம் கோரியதாகவும், சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் என அவ்வாணைக் குழு தமக்கு பதிலளித்துள்ளதாகவும் மனுதாரர் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை நிலவுவதாகவும், சர்வதேச நாணய நிதியம் மிக பாரதூரமான நிபந்தனைகளை விதித்துள்ள இச்சந்தர்ப்பத்தில், நாட்டில் தேர்தல் நடாத்துவது பொருத்தமற்றது என மக்களிடையே கருத்துக்கள் உலாவருவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 8,711 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாகவும் இந்த எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் என கலந்துரையாடப்படுவதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவன் ஊடாக நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த நன்மையும் இல்லை என சுட்டிக்கடடும் மனுதாரர், அதனால் அந்த தேர்தல் நடவடிக்கைகளை முனென்டுக்க தடை விதித்து தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு எழுத்தாணை ஒன்றினைப் பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.

ad

ad