புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2023

29 இலட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் 10 கிலோ அரிசி!

www.pungudutivuswiss.com


29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளைஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளைஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்க உள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரிசியை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ad

ad