புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2023

பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி "சாம்பியன்

www.pungudutivuswiss.com
பெண்கள் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. மும்பை, இந்திய கிரிக்கெட் 
வாரியம் சார்பில் ஐ.பி.எல். போட்டியை போன்று பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. Also Read - பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி...! அதில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணி 2-வது இடத்தையும், உ.பி.வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின. Also Read - நெருங்கும் ஐபிஎல் டி20 தொடர் - "பெங்களூரு வீரர் பட்டிதார் பங்கேற்க மாட்டார்?" நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. Also Read - பெண்கள் பிரீமியர் லீக் சாம்பியன் யார்?: டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் மெக் லானிங் 35 ரன்களும் ஷபாலி வர்மா 11 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஜோடி சேர்ந்த ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகியோர் அதிரடியில் மிரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Also Read - சச்சின் தெண்டுல்கரின் 100 சதத்தை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா ? - ரவி சாஸ்திரி பதில் முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வாங் மற்றும் ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அமெலி கெர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் யாஸ்திகா பாட்டியா 4 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஹெய்லி மேத்யூசும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நாட் சிவெர் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். இந்நிலையில் இந்த ஜோடியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 (39) ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக நாட் சிவெருடன் அமெலி கெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் நாட் சிவெர் 52 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் நாட் சிவெர் 60 (55) ரன்களும், அமெலி கெர் 14 (8) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 19.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் மற்றும் ஜெஸ் ஜோனசென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் பெண்கள் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெற்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

ad

ad