புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2023

கோட்டாபயவை வீட்டில் குடியேற விடாமல் தடுக்கும் யோஷித

www.pungudutivuswiss.com
கடந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்து
நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து
நாடு திரும்பியதும் அவருக்கு தற்காலிகமாக வாழ புலர்ஸ் வீதியில் அரச
குடியிருப்பு ஒன்று வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று காணப்படுவதோடு, அதற்கமைய மங்கள சமரவீர அமைச்சராக இருந்த போது அவர் பயன்படுத்திய ஸ்டென்மோர் சந்திரவங்கத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு வழங்கப்படவிருந்தது.
எப்படியிருப்பினும் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்டென்மோர் சந்திரவங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்தார்.
விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ அங்கு செல்வதாகவும், ஸ்டென்மோர் சந்திரவங்கவில் உள்ள வீட்டை, கோட்டாபாய ராஜபக்சவுக்கு வசிப்பிடமாக வழங்குவதாகவும் உடன்பாடு ஏற்பட்டது.
எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் விஜேராமவிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், ஸ்டென்மோர் சந்திரவங்கவில் உள்ள வீட்டின் சாவி இன்னும் கையளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் சாவியை அரசாங்கத்திடம் ஒப்படைக்காமல் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வீட்டின் சாவியை அரசாங்கத்திடம் கையளித்து, கோட்டாபய ராஜபக்ஷவை அங்கு வாழ அனுமதிக்குமாறு கூறிய போதிலும், யோஷித ராஜபக்ச இன்னும் சாவியை தம் வசம் வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச கடந்த பிரதமராக இருந்த போது, ​​யோஷித ராஜபக்ச பிரதமரின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவராகும். மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இழந்த நிலையில், யோஷிதவின் பதவியும் முடிவுக்கு வந்தது.
யோஷித ராஜபக்ஷ இல்லத்தின் சாவியை பலவந்தமாக வைத்திருப்பது எந்த அதிகாரத்தின் கீழ் என்பது கேள்விக்குறியான விடயமாகியுள்ளது.

ad

ad