புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2023

அவுஸ்திரேலிய அதிகாரிகளால்நாடு கடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்

www.pungudutivuswiss.com
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட,
 சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த 41 பேர் இன்று
 காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் பல நாள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இந்த குழுவை ஒப்படைப்பதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர்.

தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன
ர்.

ad

ad