புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2023

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர்

www.pungudutivuswiss.com
அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது 
தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 
உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் முகாம்கள் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 34,000 இலங்கையர்களும் மாநிலத்தில் வேறு இடங்களில் வசித்து வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் பெருமளவான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

ad

ad