![]() சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2019 செப்டம்பர் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது. |