புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2023

பரீட்சை மண்டபத்துக்குள் ஓடியது கஜேந்திரகுமாரா?

www.pungudutivuswiss.com


பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா. முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆளும் தரப்பை நோக்கி கடுமையாக சாடினார்.

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா. முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆளும் தரப்பை நோக்கி கடுமையாக சாடினார்

புலனாய்வுத்துறையினரால் தாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் அநீதியான முறையில் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,பொலிஸாரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கியதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள்; மாறி மாறி குற்றம் சாட்டிய நிலையில் இரு தரப்புக்கும் இடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்,சிறையில் இருந்தவர்கள்,சிறையில் இருந்து கொண்டே மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பங்கேற்றவர்கள் எல்லாம் சபையில் இருக்கும் போது புலனாய்வுத்துறை மற்றும் பொலிஸாரினால் தனக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் G சபையில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்ப இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்துள்ளமை அவரின் சிறப்புரிமையை மீறும் செயல். அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் பாராளுமன்றம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற கூட்டமொன்றுக்கு புலனாய்வுத்துறையினர் சென்று அச்சுறுத்தியுள்ளனர்.அவர்கள் சீருடை அணியவும் இல்லை. தம்மை யார் என்று நிரூபிக்கும் அடையாள அட்டையையும் காணிபிக்கவில்லை. அவர்களின் நீங்கள் யார், உங்கள் அடையாளத்தை நிரூபியுங்கள் என கஜேந்திரகுமார் கேட்டது என்ன கொலைக்குற்றமா ?

இந்த சபையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை தாக்கினார்கள். கதிரைகளைத் தூக்கி வீசினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட இரத்தக்காயங்களை ஏற்பட்டன. அவர்களுக்கு எதிராக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? ஆனால் பொலிஸாரால் புலனாய்வுத்துறையினரால் அச்சறுத்தப்பட்ட கஜேந்திரகுமாரை அநீதியான முறையில் கைது செய்துள்ளீர்கள் .

கஜேந்திரகுமாரின் தந்தையான குமார் பொன்னம்பலம் கொழும்பில் வெள்ளவத்தையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை இரு பொலிஸ் கான்ஸடபிளாலே சுட்டுக்கொன்றதாக அப்போது சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு அந்த கான்ஸ்டபிள்கள் பெயர்களையும் வெளியிட்டிருந்தது. எனவே தனது தந்தைக்கு நடந்ததுபோல் பொலிஸாரால், புலனாய்வுத்துறையால் தனக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற நியாயமான சந்தேகம் கஜேந்திரகுமாருக்கு இருக்கலாம். அதனால் அவர் புலனாய்வுத்துறையினரிடம் அடையாளத்தை நிரூபிக்குமாறு கேட்டிருக்கலாம்.

சிவில் உடையில் தமது அடையாளங்களை நிரூபிக்காது சி.ஐ.டி. ஈ ரி.ஐ.டி. என ஒவ்வொரு பெயர்களைக் கூறிக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து அடாவடி செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் . இன்று தமிழ் அரசியல்வாதிகளுக்கு நடப்பது நாளை இங்குள்ள உறுப்பினர்களுக்கு நடக்கும் என்பதனை மறந்து விடாதீர்கள் என்று சாணக்கியன் மிகவும் ஆவேசமாக உரையாற்றினார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இனவாதமாக பேசுகின்றார். அவர் விவாத்திற்கான நேரத்தை வீணடிக்கின்றார். எனவே அவருக்கு நேரம் வழங்க வேண்டாமென அப்போது சபைக்கு தலைமை தொங்கிக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பிடம் கூறினார். ஆனால் இதனை கவனத்தில் எடுக்காது சாணக்கியன் தனது குற்றச்சாட்டைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் எழுந்த அமைச்சர் மஹிந்த அமரவீர கடமையில் இருந்த பொலிஸாரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்க முயற்சித்தார். அச்சறுத்தியுள்ளார் தகாத வார்த்தைகளினால் திட்டினார். இது சரியா? பொலிஸார் தமது கடமைகளை செய்வதற்கான சுதந்திரம் தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே வடக்குக்கு ஒரு நீதி ,தெற்குக்கு பிறிதொரு நீதியல்ல,

பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொலைபேசி கொடுத்ததை மறந்து விட்டீர்களா? நாம் இங்கு சண்டித்தனம் காட்டவில்லை என்று சாணக்கியன் இராசமாணிக்கம் கூறிக் கொண்டிருந்த போது எழுந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விவாதத்திற்கான நேரத்தை இவர் வீணடித்துக் கொண்டிருக்கின்றார்.

இவரின் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு இடமளிக்க வேண்டாம் . சபாபீடத்தில் இருந்தால் சபையை ஒழுங்காக வழிநடத்த வேண்டும் என சபைக்கு தலைமை தாங்கிய இம்ரான் மஹ்ரூபை நோக்கி குறிப்பிட்டார்.

சபைக்கு தலைமை தாங்கிய இம்ரான் மஹ்ரூப் சாணக்கியனின் ஒழுங்குப்பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் இடமளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அரச தரப்பினர் சபையை ஒழுங்காக கட்டுப்படுத்துங்கள் இல்லாவிடின் சபா பீடத்தில் இருந்து இறங்கி ஆசனத்துக்கு செல்லுமாறும் கூச்சலிட்டனர்.

இதேநேரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி அமைச்சர் மஹிந்த அமரவீர , கஜேந்திரகுமார் பொலிஸாரைத் தாக்கியதாக அப்பட்டமான பொய் ஒன்றைக்கூறினார். கஜேந்திரகுமார் எபொலிஸாரைத் தாக்கினாரா அல்லது பொலிஸார் கஜேந்திரகுமாரை தாக்கினார்களா ? என்பதனை முதலில் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கஜேந்திரகுமாரை தாக்கிய பொலிஸாரை முதலில் கைது செய்யுங்கள், அவர்களிடம் விசாரணை நடத்துங்கள். கஜேந்திரகுமரை தாக்கி விட்டு அருகில் இருந்த பாடசாலை பரீட்சை மண்டபத்துக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டவர்கள் பொலிஸார் தான் எனக்கூறினார். இதனையடுத்து சபையில் அரச தரப்பினர் ''புலி''புலி'' எனக்கூச்சலிட்டனர். பதிலுக்கு சாணக்கியன்.ஸ்ரீதரன் ஆகியோரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

ad

ad