புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2023

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த விரும்புவதாக சுவிஸ் அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ காஸீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸில் இன்றைய தினம் சுவிஸ் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான ஆணையாளர் மாரோஸ் செபோகோவிக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு தரப்பிற்கும் இடையிலான முரண்பாடுகளை களையும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரு தரப்பிற்கும் இடையில் தொழில்நுட்ப மற்றும் இராஜதந்திர மட்டத்திலான விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் இரு தரப்பிற்கும் இடையில் பத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடுகளை எற்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad