புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2023

சுவிசின் இந்த நதிகளில் நீராடுவது குறித்து எச்சரிக்கை July 19, 2023

www.pungudutivuswiss.com
விட்சர்லாந்தில் சில நதிகளில் நீராடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரோன் மற்றும் ஆர்வ் ஆகிய நதிகளில் நீராடுவது உசிதமாகாது என சுவிட்சர்லாந்து கான்டன் நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடன் காலநிலை காரணமாக அநேகர் நீர் நிலைகளில் நீந்துவதற்கு மக்கள் விரும்புகின்றனர்.
எனினும் குறிப்பிட்ட இரண்டு நதிகளிலும் நீந்துவது பொருத்தமாகாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி அண்டை நாடான பிரான்சில் கழிவு நீர் திறந்து விடப்பட்டதாகவும் இவை குறித்த இரண்டு நதிகளிலும் கலந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த நதிநீரை குடிநீராகவோ அல்லது வேறு தேவைக்கோ பயன்படுத்துவது பொருத்தமற்றது என அறிவிருத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நதிநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் மாசடைந்த நிலைமைகள் மாற்றமடைந்ததும் அது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

ad

ad