புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2023

இலங்கை அணியினை சரிவில் இருந்து மீட்ட மெதிவ்ஸ் – தனன்ஞய ஜோடி

www.pungudutivuswiss.com
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது தனன்ஞய டி சில்வா – அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரது இணைப்பாட்டத்தோடு சிறந்த நிலையினை அடைந்திருக்கின்றது.

>>கிரிக்கெட்டில் ஆண் – பெண் இருபாலருக்கும் சமமான பரிசுத் தொகை

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (16) காலியில் ஆரம்பமாகியது. மழையின் தாக்கம் மற்றும் காலநிலை சிக்கல்கள் இருந்ததன் காரணமாக இன்றைய நாளில் 65.4 ஓவர்களே வீசப்பட்டிருந்தன.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரட்ன மைதான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இலங்கை குழாம் பதினொருவர்

திமுத் கருணாரட்ன (தலைவர்), நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித

பாகிஸ்தான் குழாம் பதினொருவர்

அப்துல்லா சபீக், பாபர் அசாம் (தலைவர்), அப்ரார் அஹ்மட், இமாம்–உல்–ஹக், நசீம் ஷா, நோமான் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அஹ்மட், சௌத் சகீல், சஹீன் அப்ரிடி, ஷான் மசூத்

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் சஹீன் அப்ரிடியின் வேகத்திற்கு தடுமாற்றம் காண்பித்தனர். அணியின் ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த நிஷான் மதுஷ்க சஹீன் அப்ரிடியின் பந்துவீச்சில் சர்பராஸ் அஹ்மட்டிடம் பிடிகொடுத்து 04 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நிஷான் மதுஷ்கவின் பின்னர் குசல் மெண்டிஸ் தனது விக்கெட்டினை 12 ஓட்டங்களுடன் சஹீனிடம் கொடுத்தார். மெண்டிஸின் சஹீன் அப்ரிடியின் மூன்றாவது விக்கெட் வேட்டையில் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன 29 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். திமுத் கருணாரட்னவின் பின்னர் தினேஷ் சந்திமாலும் தனது விக்கெட்டினைப் பறிகொடுக்க இலங்கை ஒரு கட்டத்தில் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

>>WATCH – உலகக் கிண்ண தகுதிகாண் சவாலை கடந்த இலங்கை | Cricket Galatta Epi 70

இந்த தடுமாற்றமான நிலையில் இலங்கை அணிக்காக பொறுப்புடன் ஆடத் தொடங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் – தனன்ஞய டி சில்வா ஜோடி முதல் நாளின் மதிய போசணத்தினைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர்.

இந்த இணைப்பாட்டத்தில் 131 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டாக முதல் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக ஆட்டமிழந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 9 பௌண்டரிகள் அடங்கலாக தன்னுடைய 39ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு 64 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

தேநீர் இடைவேளையினை அடுத்து சிறிது நேரம் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைப்பட்டதோடு பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் தனன்ஞய டி சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தோடு இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தினை தமது முதல் இன்னிங்ஸிற்காக 65.4 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்கள் பெற்று நிறைவு செய்து கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காது களத்தில் நிற்கும் தனன்ஞய டி சில்வா 94 ஓட்டங்கள் பெற்றிருக்க, சதீர சமரவிக்ரம 5 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சஹீன் அப்ரிடி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க நஷீம் ஷா, அப்றார் அஹ்மட் மற்றும் அகா சல்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

LIVE

Sri Lanka
312/10 (95.2)
Pakistan
2/0 (1)
Updated at 12:51 PM 2023-07-17



BATSMEN R B 4S 6S SR
Abdullah Shafique not out 1 3 0 0 33.33
Imam-ul-Haq not out 1 3 0 0 33.33

Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
TOTAL 2/0 (1 Overs, RR: 2)
BOWLING O M R W ECON
Vishwa Fernando 1 0 2 0 2.00

ad

ad