புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2023

கருங்கடல் தானிய ஒப்பந்த ஏற்றுமதியை நிறுத்தியது ரஷ்யா!! பொருட்களின் விலை அதிகரிக்குமா?

www.pungudutivuswiss.com
உக்ரைனிலிருந்து கருங்கடல் ஊடாக ஏற்றுமதி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அலறத்தொடங்கியுள்ளன.
கிரெம்ளின் தானிய ஒப்பந்தம் தொடர்பான அதன் முடிவுக்கு கிரிமியன் பாலம் தாக்குதலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.கிரீமியா பாலம் மீதான உக்ரைனின் தாக்குதல் உக்ரேனிய பயங்கரவாத தாக்குதல் என்று ரஷ்யா கூறியது.
ஜூலை 18 முதல் தானிய ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்துவதாக மின்ஸ்கில் உள்ள ரஷ்ய தூதரகம் மூலம் ரஷ்யா உக்ரைனுக்கு முறையாக அறிவித்தது என்று பெலாரஸுக்கான மாஸ்கோவின் தூதுவர் போரிஸ் கிரிஸ்லோவ் தெரிவித்தார்.
தூதரகத்திலிருந்து உக்ரைனுக்கு இராஜதந்திர வழிகள் மூலம் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜூலை 18 முதல் ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம்
தானிய ஒப்பந்தத்தை ரஷ்யா கைவிடுவது இழிவான செயல் என ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் ஊர்சிலா வொன் டியர் லியேன் கூயியுள்ளார். அத்துடன் மேலும் ஏழை நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பணியாற்றும் என்றும் கூறினார்.
யேர்மனி
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருவதாக நாட்டின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
தானியங்களை தனித்து ஏற்றுமதி செய்ய ரஷ்யா திட்டம்
தானிய ஒப்பந்தம் தோல்வியடைந்தாலும், கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து மாஸ்கோ வெளியேறிய போதிலும், அதன் உறுப்பினர்கள் போட்டி விலையில் வாடிக்கையாளர்களுக்கு ரஷ்ய தானியங்களை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய தானிய சங்கமான ருஷ்கிரைன் (Rusgrain) தெரிவித்துள்ளது. உலகச் சந்தைக்கு கோதுமையின் மிகப்பெரிய விநியோகஸ்தர் ரஷ்யாதான். எனவே ரஷ்ய தானிய ஏற்றுமதியாளர்களின் ஒப்பந்தக் கடமைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அது கூறியது.
பெருமளவான தானியங்களை அபகரிக்கும் மேற்கு நாடுகள்
உக்ரைனில் உள்ள தானியங்கள் ஏழை நாடுகளில் பட்டினியிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகளை சபை இடைத்தரகராக இருந்து துருக்கியின் உதவியுடன் ரஷ்யாவும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் நாளை 18 திகதி முடிவடைகிறது.
கருங்கடல் வழியாக ஏற்மதி செய்யப்படும் தானியங்கள் (கோதுமை, ஒட்ஸ், சூரியகாந்தி எண்ணெய் உட்பட பல பொருட்கள்) பெரும்பாலம் ஏழை நாடுகளுக்குச் செல்லாது 90 விடுக்காடு பொருட்கள் செல்வந்த நாடுகளாக உள்ள மேற்று நாடுகளுக்கே கடல்வழியில் மாற்றப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது.
இந்த நடவடிக்கை உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுதாக போலந்து, கங்கோி, ரூமனியா போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்திகள் பாதிக்கபடுவதாகக் கூறி தொடர் போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தினர். இதனால் உக்ரைனிலிருந்து வரும் தானியங்களுக்கு அந்நாடுகள் தடை விதித்துள்ளதை இங்கே நினைவூட்டத்தக்கது.
தானிய ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்டால் பான், கோதுமை, என தானியத்திலிருந்து உருவாக்கப்படும் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
Ist möglicherweise ein Bild von Kahn, Schiff und Panamakanal
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad