புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2023

ஓமந்தையில் தரித்து நின்ற வாகனங்களை மோதிய லொறி! - ஒருவர் பலி.

www.pungudutivuswiss.com

வவுனியா- ஓமந்தை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா- ஓமந்தை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ-9 வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் வண்டி மற்றும் உழவு இயந்திரம் மீது லொறி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இயந்திர கோளாறு கப் வண்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை இழுத்துச் செல்ல வந்த உழவு இயந்திரமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வவுனியா நோக்கி வேகமாக பயணித்த லொறி, கப் வண்டி மற்றும் உழவு இயந்திரத்தில் மோதியுள்ளது.

விபத்தில் கப் வண்டியின் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் காயமடைந்து நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கப் வண்டி சாரதியான தலவாக்கலை கிரேட்வெஸ்ர்டன் தோட்டத்தை சேர்ந்த 28 வயதான ராமச்சந்திரன் சதீஷ்குமார் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள லொறி சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவர் வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து காரணமாக கப் வண்டி மற்றும் உழவு இயந்திரம் ஆகியவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

ad

ad