புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2023

13சரிவராது :மாவ

www.pungudutivuswiss.com1
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது.அதனால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் 
அரசியல் தீர்வு என்பதையே இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தும் என கட்சியின்; தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப் போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்றும் மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

தமிழரசுக்கட்சியை பொறுத்தவரை ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் அரசியல் தீர்வொன்று அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என வலியுத்துகின்றது.

அதன் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டால் அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கு தமது தரப்பு ஆதரவு வழங்க முடியும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் 13வது திருத்தச்சட்ட அமலாக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவருகின்றமை குறிப்
பிடத்தக்கது.

ad

ad