புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2023

பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சுட்டுக்கொன்ற சௌதி அரேபிய எல்லைப் படை புலம்பெயர்ந்தோர் படுகொலை

www.pungudutivuswiss.com
எத்தியோப்பியாவில் இருந்து ஏமன் வழியாக சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டவர்களில் ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.
ஏமன் நாட்டுடனான எல்லைப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை சௌதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்ததாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில், படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எத்தியோப்பியாவில் இருந்து போர் நடக்கும் ஏமன் நாட்டைக் கடந்து வந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இடம்பெயரும் மக்களில் சிலர், துப்பாக்கி சூட்டில் கை-கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயங்களுடன் தவித்து வருவதாகவும், அவர்கள் வந்த பாதைகளில் பிணங்கள் கிடந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுபோன்ற திட்டமிட்ட கொலைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை சௌதி அரேபியா ஏற்கெனவே நிராகரித்துள்ளது.

விளம்பரம்

இதுகுறித்து ஹெச்.ஆர்.டபிள்யூ என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

சௌதி, ஏமன் ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் கரடுமுரடான வடக்கு எல்லையில் இந்தச் சம்பவம் நடந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, சௌதி போலீசாரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் மழை பொழிவதைப் போல் துப்பாக்கியால் புலம்பெயர்ந்தோரை நோக்கிச் சுட்டதாகவும், அடுத்து சிறிது நேரம் கழித்து வெடிகுண்டுகளால் தாக்கியதாகவும் புலம்பெயர்ந்தோர் தெரிவித்த தகவல்கள் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

புலம்பெயர்ந்தோரை பிபிசி தனித்தனியாகத் தொடர்புகொண்டு பேசுகையில், அவர்கள் கூட்டம் கூட்டமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் எத்தியோப்பியாவில் இருந்து எண்ணெய் வளம் மிக்க சௌதி அரேபியாவில் வேலை தேடி இரவு நேரத்தில் எல்லையைக் கடந்தபோது திகிலூட்டும் வகையில் சௌதி அரேபிய படையினர் தங்களைத் தாக்கியதாகத் தெரிவித்தனர்.

"துப்பாக்கிச் சூடு இடைவிடாமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது," என 21 வயது முஸ்தபா சௌஃபியா முகமது பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் அவர் உள்ளிட்ட 45 பேர் எல்லையைக் கடக்க முயன்றபோது நடந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

"என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக்கூட நான் உணரவில்லை," என்று கூறிய அவர், "நான் எழுந்து நடக்க முயன்றபோதுதான் எனது காலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதை உணர்ந்தேன்," என்றார்.

இந்திய இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த ஆப்பிரிக்க குடும்பங்களின் மறையாத கோபம்
22 ஆகஸ்ட் 2023
புனித ஜார்ஜ் கோட்டை: சென்னையின் 384 ஆண்டு கால வரலாற்றின் தொடக்கப் புள்ளி
22 ஆகஸ்ட் 2023
சந்திரயான்-3 விண்கலம் தங்க நிறத் தகடால் மூடப்பட்டிருப்பது ஏன்?
22 ஆகஸ்ட் 2023
புலம்பெயர்ந்தோர் படுகொலை
படக்குறிப்பு,
சௌதி அரேபியா-ஏமன் எல்லையில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று முஸ்தபா சௌஃபியா முகமது கூறுகிறார்.

ஏமன் மற்றும் எத்தியோப்பியாவை சேர்ந்த மனித கடத்தல்காரர்களை நம்பிப் பயணம் மேற்கொண்ட புலம்பெயர்ந்தோர், பட்டினி மற்றும் அச்சம் கலந்த மூன்று மாத கால பயணத்தின் இறுதியில் கொடூரமான, ஆபத்தான, வன்முறைகளோடு அந்தப் பயணத்தை முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தாக்குதல் நடந்து சில மணிநேரத்திற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட காட்சியில் அவரது இடது பாதம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. முஸ்தபாவின் கால் தற்போது முழங்காலுக்குக் கீழே முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், எத்தியோப்பியாவுக்குத் திரும்பி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தற்போது ஒரு கரடுமுரடான செயற்கைக் கால் மற்றும் ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடந்து வருகிறார்.

"நான் எனது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களுக்கு உதவும் நோக்கில் பணம் சம்பாதிக்க சௌதி அரேபியாவுக்குச் சென்றேன்," என்று கூறிய இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர், "ஆனால் எனது நம்பிக்கை நிறைவேறவில்லை. இப்போது எனது பெற்றோர்கள்தான் எனக்கு எல்லா வகையிலும் உதவி வருகின்றனர்," என்றார்.

எத்தியோப்பியாவைச் சேர்ந்த மற்றொரு நபர் இஸ்பா (அவரைப் பாதுகாக்கும் நோக்கில் பெயரை மாற்றியுள்ளோம்). அவர் பிபிசியிடம் பேசியபோது, எல்லையைக் கடக்க முயன்ற தன்மீது, சௌதி அரேபிய ராணுவச் சீருடை அணிந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்தார்.

"அவர்கள் எங்களை அடித்துத் துன்புறுத்தினர். சிலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்தோரின் பிணங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"என்னை அவர்கள் துப்பாக்கியால் சுட்டபோது, எனது இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு மேல் பகுதியில் குண்டு பாய்ந்தது. அதனால் எனது கால்கள் தற்போது செயலிழந்துவிட்டன. என்னால் நடக்கக்கூட முடியாது. நான் இறந்துவிடுவேன் என்ற பயம் அப்போது எனக்கு ஏற்பட்டது."

கொலைக்களமான எல்லைப் பகுதி
உயிர் பிழைத்தவர்களில் சிலர் இன்னும் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

ஏமன் தலைநகரில் வசிக்கும் ஜாரா என்ற இளம்பெண், என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியாத நிலையில் உள்ளார்.

அவருக்கு 18 வயதாகிறது என்றும், ஆனால் அதைவிட குறைந்த வயதுடைய தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். (அவருடைய அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் அவரது உண்மையான பெயரை நாங்கள் பயன்படுத்தவில்லை.)

ஏற்கெனவே லஞ்சம் உள்ளிட்ட வகையில் அவருக்கு சுமார் 2,500 அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளன. இந்நிலையில், எல்லைப் பகுதியில் குண்டு மழையையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

ஒரு துப்பாக்கித் தோட்டா அவருடைய ஒரு கையில் இருந்த விரல்கள் அனைத்தையும் பிய்த்துவிட்ட நிலையில், அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

ad

ad