புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2023

கனடாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!- முக்கிய நகரில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் மக்கள்.

www.pungudutivuswiss.com


மிகவேகமாக பரவிவரும் காட்டுதீ குறித்த  அச்சம் காரணமாக கனடாவின் தொலைதூர வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரமொன்றிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 20,000பேர் வசிக்கும் யெலோன்நைவ் என்ற  நகரத்தை வார இறுதியில் காட்டுதீ நெருங்ககூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மிகவேகமாக பரவிவரும் காட்டுதீ குறித்த அச்சம் காரணமாக கனடாவின் தொலைதூர வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரமொன்றிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 20,000பேர் வசிக்கும் யெலோன்நைவ் என்ற நகரத்தை வார இறுதியில் காட்டுதீ நெருங்ககூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

புதன்கிழமை காட்டுதீ நகரத்திலிருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டது.

இதேவேளை ஹேய்ரிவர் பகுதியில் உள்ள சமூகத்தையும் காட்டுதீ பாதிக்கின்றது. நகரிலிருந்து தப்பியவேளை எங்கள் கார் உருகத்தொடங்கியது என தப்பிய ஒருவர்தெரிவித்துள்ளார்.

200 காட்டு தீக்களுக்கு எதிரான போராட்டம் காரணமாக நோர்த்வெஸ்ட் டெரிட்டெரிசில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

காட்டுதீக்கள் ஆபத்தானவையாக மாறியுள்ளன தற்போது யெலோநைவ் ஆபத்திற்குள் சிக்குண்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உடனடி ஆபத்தில்லை ஆனால் மழைபெய்யாவிட்டால் வாரஇறுதிக்குள் காட்டுதீ நகரத்தை நெருங்கிவிடும், இதன் காரணமாக நகரத்தில் தங்கியிருக்க நினைத்தால் உங்களை நீங்களே ஆபத்துக்குள் சிக்கவைக்கின்றீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad