புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2023

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டங்கள்!

www.pungudutivuswiss.com
இலங்கையில்  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    

வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைகிறது.

போராட்டக்காரர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி யாழ் முனியப்பர் கோவிலடிவரை போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இக்கவனயீப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பித்த பேரணி காந்திப் பூங்கா வரை சென்றது.

   
   Bookmark and Share Seithy.com

ad

ad