புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2023

ரஷ்யாவால் பிரபல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

www.pungudutivuswiss.com

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகளில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. அந்த விலைவாசி உயர்வு இப்போதும் உலக மக்களில் ஏராளமானோரை பாதித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு, உக்ரைனில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகளில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. அந்த விலைவாசி உயர்வு இப்போதும் உலக மக்களில் ஏராளமானோரை பாதித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு, உக்ரைனில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது

இன்னமும் மக்கள் உணவுப்பொருட்கள் விலைவாசியை எதிர்கொள்ளத் திணறிவரும் நிலையில், நேற்று இரவு, Danube நதித் துறைமுகத்தில் உள்ள தானியக் கிடங்குகள் மீது ரஷ்யா வான்வெளித்தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு கப்பல் மூலம் தானியங்கள் அனுப்பப்படும் முக்கியமான இடம் இதுதான்.

ஒடிஷா பகுதி கவர்னரான Oleh Kiper இந்த தாக்குதல் குறித்துக் கூறும்போது, நேற்று இரவு, இரண்டு முறை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தானியக் கிடங்குகளின் கூரைகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது

ad

ad