![]() கோப்பாய் தெற்கு பகுதியில் வீதியை கடந்த வேளை மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். |
குறித்த பெண் நேற்று முன்தினம் கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக, பருத்தித்துறை வீதியை குறுக்கே கடந்தார். இதன்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் உயிரிழந்தார். கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த நாகராஜா இராஜபூவதி (வயது 68) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். |
-
13 ஆக., 2023
வீதியை கடக்க முயன்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்! [Sunday 2023-08-13 06:00]
www.pungudutivuswiss.com