புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2023

விகாரையைத் தடுக்க சம்பந்தன் யார்?- நிலாவெளி வீதியில் பிக்குகள் ஆவேசம்! Top News

www.pungudutivuswiss.com

திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம், வரலாற்று சான்றுகளை கிளறுகின்ற சம்பந்தன், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரை காரணமாக இனமுறுகல் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து உத்தேச விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.

நிலாவெளி பெரியகுளம் பகுதியில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன. அங்கு வாழும் தமிழ் மக்கள் விகாரையின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்க இருப்பதை நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் விகாரை நிர்மாணப்பணி தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் பாரிய இனமுறுகல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நலன்களை பேணும் ஆளுநர் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக உத்தேச விகாரையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad