புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2023

20 நாட்களில் 75,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

www.pungudutivuswiss.com


செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்

செப்டெம்பர் மாதத்திலும் 19,767 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,336 நபர்களும், ஜேர்மனியிலிருந்து 5,199 பேரும், ரஷ்யாவிலிருந்து 4,835 பேரும், சீனாவிலிருந்து 4,338 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 4,064 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 979,540 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ad

ad