புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2023

ஆசிய கோப்பை ; இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது?

www.pungudutivuswiss.com
இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை
அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை
து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. Also Read - ஆசிய கோப்பை; 39 ஆண்டுகால வரலாறு மாறுமா...? இறுதி சுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்தியாவுக்கு எதிராக தோற்றும், வங்காளதேசத்தை வீழ்த்தியும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. எனவே இதில் வெற்றி காணும் அணி சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். Also Read - ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள்: பென் ஸ்டோக்ஸ் சாதனை.! கொழும்புவில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற சில ஆட்டங்களின் இடையே மழை குறுக்கிட்டு தடைபட்டது. இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அதில் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும்.

ad

ad