புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2023

திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது! Top News [Thursday 2023-09-14 16:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில்  12 வயது சிறுமிக்கு  தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண்  கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

கொலை செய்யப்பட்ட சிறுமி, சந்தேக நபரான அந்த பெண்ணின் மகளின் முதல் திருமணத்தின் போது பிறந்தவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரான அந்தப் பெண், சிறுமியை கோப்பாய் விடுதிக்கு கடந்த 9ஆம் திகதி அழைத்து வந்ததாகவும், அங்கு அவருக்கு மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோப்பாய் விடுதியின் அறையொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுதியை சோதனையிட்ட போது சிறுமி அந்த அறையில் கட்டிலில் இறந்து கிடந்ததையும், மேற்படி சந்தேகநபர் பக்கத்து படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்ததையும் கண்டனர். சந்தேக நபரான அந்தப் பெண், கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

திருகோணமலையைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண், திருகோணமலையைச் சேர்ந்த நாகபூசணி சிவநாதன் என அறியமுடிகின்றது. 3 நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் திருகோணமலையில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக யாழ். வந்ததாகவும் குறித்த பாட்டி ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விருவரும் ஒரு தடவை மாத்திரமே ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸாரிடம் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.

பாட்டியால் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடிதமொன்று அவ்வறையில் கிடந்துள்ளது. அந்தக் கடிதத்தில் தாம் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடிதம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் கடிதத்தை அடிப்படையாக கொண்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ad

ad