புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2023

சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க தெரிவுக்குழு! - சபையில் தீர்மானம்.

www.pungudutivuswiss.com
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இந்தப் பிரேரணையின் அடிப்படையில் 11 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி இந்தக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் நியமிப்பார்.

இந்த விசேட குழுவின் முதலாவது அமர்வு இடம்பெற்ற தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அல்லது நாடாளுமன்றத்தினால் குறிக்கப்படும் காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad