புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2023

பாலஸ்தீன அகதிகளை நெகேவ் பாலைவனத்திற்கு இஸ்ரேல் நடத்தலாம் - எகிப்து அதிபர்

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் - காசாப் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை எகிப்த்துக்குள் வெளியேற்றுவதை விட இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்திற்கு இஸ்ரேல் ந
கர்த்தலாம் என்று எதிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி பரிந்துரைத்தார்.
இஸ்ரேலில் நெகேவ் பாலைவனம் இருக்கிறது. காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைளைச் செய்து முடிக்கும் வரை பாலஸ்தீனியர்கள் நெகேவ் பாலைவனத்திற்கு இடம்பெயர வைக்கலாம் என தனது பரிந்துரையை ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் செய்தியாளர் சந்திப்பில் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி தெரிவித்தார்.

பாலஸ்தீனியர்கள் எகிப்துக்கு இடம்பெயர வைக்கப்பட்டால், இஸ்ரேலால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பல ஆண்டுகளாக நீடிக்கும். இப்போரின் விளைவுகள் எகிப்திலும் தொடரும். மேலும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சினாய் ஒரு தளமாக இருக்கும். இந்த விடயத்தில் எகிப்து பயங்கரவாதிகளின் தளமாக முத்திரை குத்தப்படும் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கூறினார்.

இஸ்ரேலின் மின்சாரம், நீர், மின்சாரம் ஆகியவற்றைத் துண்டிக்கும் செயல்கள் பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக சினாய் தீபகற்பத்திற்கு மாற்றுவதற்கான ஒரு வழியாகும் அதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று எகிப்திய அதிபர் மேலும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ad

ad