புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2023

மெத்தைக்கு அடியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்: அதிரவைத்த முன்னாள் காங்கிரஸ்கவுன்சிலர்

www.pungudutivuswiss.com

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்த வகையில், நேற்று நள்ளிரவில் கர்நாடாக மாநிலம், பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவர், பெங்களூரு மாநகராட்சியின் 95 -வது வார்டின் முன்னாள் கவுன்சிலராவார். இவருடைய கணவரான அம்பிகாபதி ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான பெங்களூரு, ஆர்.டி.நகர் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பூட்டி வைத்த அறை ஒன்றில் உள்ள மெத்தைக்கு அடியில் இருந்த அட்டைப்பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது சோதனையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, 23 அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.42 கோடி ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ad

ad