பெண்களின் அரசியலுக்கான தடைகளை கலைந்தறிவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றத்தினால் வெகுஜன ஊடக ஒத்துழைப்பு செயல் திட்டம் மற்றும் ஊடக கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள மல்லிகா ஹோட்டலில் இடம் பெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட அவர், பெண்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள் எனவும் குறிப்பிட்டார். வேறு நாடுகளில் பெண்களின் விகிதாசாரம் அதிகளவில் இருப்பதாகவும் இலங்கையில் 40க்கும் மேற்பட்ட விகிதாசாரத்தில் பெண்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் தேர்தலின் போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் எப்போதும் பெண்கள் சமையலறையில் இருப்பதை மட்டும் விரும்பவில்லை எனவும் அங்கு பங்கேற்ற பெண்கள் அதிக அளவில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர். |