புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2023

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

'எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை' என எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சுரேஸ்குமார் தணிகை, லோகேஸ்வரன் தமிழினி ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்சமையலறையில் உயிர்மாய்த்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

ad

ad