புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2023

ஜனாதிபதியும் இல்லை, பொலிஸ் மா அதிபரும் இல்லை - யாரிடம் முறையிடுவது?

www.pungudutivuswiss.com


மயிலத்தவனை - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்.

மயிலத்தவனை - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமைஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தே சாணக்கியன் இராசமாணிக்கம் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை. நாட்டின் பொலிஸூக்கு பொறுப்பான அமைச்சரும் நாட்டில் இல்லை. அத்துடன் பொலிஸ்மா அதிபரின் நியமனமும் சட்டவிரோதமானது, அதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைக்கவில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது. இதேவேளை ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையால் நீக்க முடியாது என்று இன்னுமொரு தரப்பு கூறுகின்றது.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கூட்டமொன்றை நடத்தி கூறிவற்றை இன்று வரையில் பொலிஸாரால் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை. பொலிஸ்மா அதிபர் இல்லாத நேரத்தில் நாங்கள் பிரச்சினைகளை யாரிடம் கூறுவது என்று வினவினார்

ad

ad