புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2023

இங்கிலாந்தை துவம்சம் செய்த இலங்கை..!

www.pungudutivuswiss.com

இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான 25வது போட்டியில் இன்று (26) 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சாளர்களின்

சிறப்பான திறமைகள் மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரின் 137* இணைப்பாட்டமே இந்த வெற்றிக்கான முக்கிய காரணமாகியது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இலங்கை அணி தொடர்ச்சியாக 5 முறை இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

பதில் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை (160/2) இழந்து இந்தப் போட்டியில் தனது இரண்டாவது வெற்றியை உறுதி செய்தது.

குசல் பெரேரா 4 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்த பின்னணியில், சதீரவும், பாத்தும் மூன்றாவது விக்கெட்டுக்கு 137* இணைப்பாட்டம் பெற்றனர்.

தொடர்ந்து நான்காவது அரைசதத்தை அடித்த பாத்தும், 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 77(83) ரன்கள் எடுத்தார்.

சதீர தனது இரண்டாவது தொடர்ச்சியான அரை சதத்தையும் பெற்று ஆட்டமிழக்காமல் 65(54) பெற்றார். அவரது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த வருட உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் விளையாடிய ஏஞ்சலோ மெத்தியூஸ் 14 / 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார் 35 /3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். கசுன் ராஜித 36/2 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ad

ad