புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2023

உடுவிலில் போதை ஊசி ஏற்றிக் கொண்ட இளைஞன் மரணம்! [Thursday 2023-10-26 19:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில், அதிகளவு போதைப்பொருளைப்  பயன்படுத்திய இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், அதிகளவு போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் தாயார் கதவை திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இந்நிலையில் தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad