புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2023

“பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது” - ஓ.பன்னீர்செல்வம்!

www.pungudutivuswiss.com

பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்  25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.

பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது

அதே சமயம் அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து அவர் பேசுகையில், “அதிமுக தனித்து நின்றால் வெற்றி பெறாது. தற்போது இருக்கக்கூடிய அதிமுக ஒன்றுபட்டால் தான் வெற்றி பெற முடியும். பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு நான் தூது அனுப்பியதாக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். நானும் தினகரனும் இணைந்திருக்கிறோம். எங்கள் அணிக்கு வருவது குறித்து சசிகலா தான் கூற வேண்டும்.

ad

ad