புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2023

யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்த்த மழை! - 850 குடும்பங்கள் பாதிப்பு.

www.pungudutivuswiss.com

தொடரும் மழையினால் யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

தொடரும் மழையினால் யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 234 குடும்பங்களைச் சேர்ந்த 766 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 950பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 191பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்றுகாலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அச்சுவேலியில் 175.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 170.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 139.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், மீசாலையில் 133 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், தொல்புரத்தில் 118 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், யாழ்ப்பாணம் மத்தியில் 68.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், கோட்டை பகுதியில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், சாவகச்சேரியில் 34.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பனில் 24.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், நயினாதீவில் 6.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், நெடுந்தீவில் 2.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேலும் கிளிநொச்சியில் 99.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், ஆனையிறவில் 56.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், அக்கராயனில் 128.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad