புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2023

10 மாதங்களில் 15 ஆயிரம் படையினர் தப்பியோட்டம்!- நாட்டுக்கு பெரும் ஆபத்து.

www.pungudutivuswiss.com



இலங்கையின் முப்படைகளிலிருந்தும் தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முப்படைகளிலிருந்தும் தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது

கடந்த பத்து மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15360 பேர் பாதுகாப்பு பிரிவிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இராணுவத்தின் 99அதிகாரிகள், கடற்படையின் 26 அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் 15 அதிகாரிகளும் இதில் அடங்குகின்றனர்.

மற்ற அணிகளில் உள்ள 15220 பேரில் இராணுவத்தின் 12643 பேரும் கடற்படையின் 1770 பேரும் உள்ளனர். தலைமறைவான அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளிலுள்ளவர்களை கைது செய்வதற்கு ஒரேயொரு பொது மன்னிப்பு காலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமறைவான நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நாடு முழுவதும் கொலைகள் மற்றும் கும்பல் நடவடிக்கைகளுக்கு ஒப்பந்தக் கொலையாளிகளாக பாதாள உலக தலைவர்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை வேலைக்கு அமர்த்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

   
   

ad

ad