புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2023

தர்மலிங்கத்தை படுகொலை செய்தவர்களுடன் மகன் கூட்டு

www.pungudutivuswiss.com




இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கயவர் கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கயவர் கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்


தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு இன்று மாலை சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் அமரர் தர்மலிங்கமும் ஒருவர். அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியுற்றமை கிடையாது. இதனால்தான் அவரை மக்கள் முடிசூடா மன்னர் என்று அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார்.

அவரது மகன் ஆயுதக்குழு உறுப்பினராக இருந்து பின் ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்டபோது தந்தையின் பெயரையும் தமிழரசுக் கட்சியின் பெயரையும் பயன்படுத்தித்தான் மக்கள் மனங்களை வென்றார். இன்று தர்மத்தையே கற்றுத் தந்த தர்மரின் சிலையில் அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. அதனைத் தமிழரசின் வாலிபர் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று காலை தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா நிகழ்வில் அவரை யார் கொலை செய்தார்களோ அந்த ஆயுதக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். இன்று தனது தந்தையைக் கொன்ற கஜவர்களுடன் அவரது மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகிறது என்றார்.

ad

ad