புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2024

படம் எடுத்து விளையாடிய மாணவர்கள் இருவரை அள்ளிச் சென்றது கடல் அலை!

www.pungudutivuswiss.com


அம்பாறை, மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் கடலில் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

அம்பாறை, மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் கடலில் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

மாளிகைக்காடு - சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 13 - 15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்கள் நேற்று ஜும்மா தொழுகையை முடித்துக் கொண்டு சைக்கிள்களில் நிந்தவூர் - ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்று படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 4.20 மணியளவில் அதில் இருவரைக் கடலலை உள்ளிழுத்துச் சென்றுவிட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கடலில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் மீனவர்களும், பொதுமக்களும் இயந்திரப் படகுகளைக் கொண்டு தேடியும் இரவு 9 மணி வரை அந்த மாணவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

ad

ad