புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2024

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி துவங்கியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

www.pungudutivuswiss.com

தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி
சுவிஸ் அம்மாக்களுக்கு, அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த எண்ணின் வாட்ஸ் ஆப் செய்தி ஒன்று அனுப்பமுடியுமா? என்னும் ரீதியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

இல்லையென்றால், அம்மா, கொஞ்சம் பணம் அனுப்பமுடியுமா என்று கேட்கிறது அந்த செய்தி.

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி | A Bizarre Scam Targeting Mothers In Switzerland

அதிகாரிகள் எச்சரிக்கை
அப்படி ஒரு செய்தி வந்தால், ஒன்றில் உங்கள் பிள்ளையை அவருடைய மொபைல் எண்ணில் அழைத்துப் பேசுங்கள், அல்லது அந்த செய்திக்கு பதிலளிக்காதீர்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.

விடயம் என்னவென்றால், சில மாதங்கள் முன்வரை, பிரெஞ்சு மொழி அல்லது ஜெர்மன் மொழி பேசும் பெற்றோருக்கு ஆங்கிலத்தில் செய்தி அனுப்பப்பட்டுவந்த நிலையில், தற்போது அவரவர் பேசும் மொழியிலேயே இந்த மோசடி செய்திகள் அனுப்பப்படுகின்றன.

ஆக, இது ஒரு நவீன மோசடி என்றும், பணமோ அல்லது வங்கி விவரங்களையோ அல்லது பாஸ்வேர்டுகளையோ மொபைலில் அனுப்பாதீர்கள் என எச்சரிக்கிறார்கள் அதிகாரிகள்.

ad

ad